NATIONAL

மக்களவையின் புதிய தலைவராக அஸ்ஹார் அஸிஸான் ஹாரூண் நியமனம் !!!

13 ஜூலை 2020, 8:43 AM
மக்களவையின் புதிய தலைவராக அஸ்ஹார் அஸிஸான் ஹாரூண் நியமனம் !!!

கோலா லம்பூர், ஜூலை 13:

நாடாளுமன்றத்தில் இன்று  முன்னாள் மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அஸ்ஹார் அஸிஸான் ஹரூண் இன்று திங்கட்கிழமை10-ஆவது மக்களவைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 58 வயதுடைய அஸ்ஹர், மக்களவைத் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே வேட்பாளர் ஆவார். அதே நேரத்தில், மக்களவையின் துணைத் தலைவராக பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஓத்மான் நியமனம் பெற்றுள்ளார்.

மக்களவைக் கூட்ட மன்றத்தின் விதிமுறைகள், கூட்ட விதிமுறைகள் 4 உட்பிரிவு ( 1) கீழ் அஸ்ஹார் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கான தீர்மானத்தை பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் முன் வைத்தார். இந்நிலையில், ஒரு வேட்பாளரின் பெயர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டதால் வாக்களிப்பு நடத்தப்படாமலேயே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.