NATIONAL

2ஸ்தே திட்டம் பி40 வர்கத்தினர் சொந்த வீடுகளை வாங்க வழி வகுக்கிறது !!!

13 ஜூலை 2020, 5:54 AM
2ஸ்தே திட்டம் பி40 வர்கத்தினர் சொந்த வீடுகளை வாங்க வழி வகுக்கிறது !!!

ஷா ஆலம், ஜூலை 13:

விவேக வாடகையில் இருந்து  சொத்துடமையாகும் திட்டத்தை (2ஸ்தே) அறிமுகப்படுத்துவதன் மூலம் குறைந்த வருவாய் ஈட்டும் வர்கத்தினர் (பி40) ரிம 200,000-க்கும் குறைவான விலையில் சொந்த வீடுகளை வாங்க வழி வகுக்கிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சட்ட மன்ற கூட்டத்தில்  தெரிவித்தார். இரண்டு கட்டத் திட்டத்தில் விவேக வாடகைக்கு குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை வாடகைக் காலத்தையும் பிறகு ‘ரெண்ட் டூ ஓன்' கீழ் வீட்டுக்கு உரிமையாளராக வாய்ப்பை உள்ளடக்கியது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

" வாடகைக் காலம் முடிவுற்றவுடன் வீடுகளை வாங்க முடியும் அல்லது வீட்டின் மொத்த வாடகையில் இருந்து 30% மீண்டும் திரும்பப் பெறலாம்," என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் மூன்றாவது பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை தாக்கல் செய்த போது இவ்வாறு அமிருடின் ஷாரி பேசினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.