NATIONAL

கல்வி மற்றும் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும்- அன்வார்

31 மே 2020, 2:55 PM
கல்வி மற்றும் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும்- அன்வார்

ஷா ஆலம், மே 31:

மக்களிடையே நிலவி வரும் கல்வி மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மத்திய அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நீதிக் கட்சியின் (கெஅடிலான்) தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். நாடு கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் வேளையில், அரசாங்கம் தெளிவான கொள்கைகளை வகுக்காதலால் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

" நாம் கல்வி பயிலும் முறைகளை பற்றி விவாதிக்க வேண்டும். இணையக் கல்வி பற்றி அறிவிக்கிறார்கள். ஆனால், புறநகர் பகுதியில் உள்ள மக்கள் இதனால் பயனடைவார்களா? புறநகர் பகுதியில் இணைய வசதிகள் மிகக் குறைவாக இருக்கும். இந்த நிலையில், வசதி படைத்த மாணவர்கள் , ஏழை மாணவர்களை விட முன்னிலையில் இருப்பார்கள்," என்று முகநூலில் நேரலை நிகழ்ச்சியில் உரையாற்றும் போது இவ்வாறு அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.