NATIONAL

ரோன்95, ரோன்97 ஏழு சென் ஏற்றம், டீசல் ஆறு சென் உயர்வு !!!

22 மே 2020, 10:55 AM
ரோன்95, ரோன்97 ஏழு சென் ஏற்றம், டீசல் ஆறு சென் உயர்வு !!!

புத்ராஜெயா, மே 22:

ரோன் 95 பெட்ரோலின் சில்லரை விலை ஏழு சென் ஏற்றம் கண்டு ரிம 1.38 ஆகவும் ரோன் 97 பெட்ரோலின் சில்லரை விலை ஏழு சென் ஏற்றம் கண்டு ரிம 1.68 ஆக உள்ளது. இதனிடையே, டீசல் விலை ஆறு சென் உயர்வு கண்டு ரிம 1.51 ஆக இன்று நள்ளிரவு முதல் மாற்றம் காண்கிறது என்று நிதியமைச்சு தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இந்த விலைகள் மே 23 முதல் மே 29 வரை நடப்பில் இருக்கும் என அது மேலும் தெரிவித்தது.

" இந்த விலையேற்றம், சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ள பெட்ரோலியம் எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதே காரணமாகும். உலக கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், அரசாங்கம் தொடர்ந்து இந்த விலையேற்றத்தை கவனித்து வரும். மக்களின் நல்வாழ்வை பேண தொடர்ந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று அது மேலும் தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.