NATIONAL

எம்பிகே பணியாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை; தனியார் கிளினிக் இலவசமாக வழங்குகிறது !!!

5 மே 2020, 2:41 AM
எம்பிகே பணியாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை; தனியார் கிளினிக் இலவசமாக வழங்குகிறது !!!

ஷா ஆலாம், மே 5:

கிள்ளான் நகராண்மை கழகத்தின்  (எம்பிகே) சுமார் 300 முன் வரிசை  ஊழியர்கள் கோவிட்-19 இலவச சுகாதார பரிசோதனையை  போத்தானிக் போலிகிளினிக்  வழங்குகிறது. இந்த தனியார் கிளினிக் கிள்ளான் நகரத்தில் போத்தானிக் பகுதியில் அமைந்துள்ளது, ஏப்ரல் 16 முதல் இலவச பரிசோதனைகளை  வழங்கி வருகிறது என தனது முகநூலில்   ஒரு அறிக்கையில், எம்.பி.கே இந்த முயற்சிக்கு போலிக்கிளினிக்கு நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையில், கோவிட் -19 பரவுவதை நிவர்த்தி செய்ய பணியாற்றும் முன் வரிசை  பணியாளர்களின் நினைவாக இந்த முயற்சி செயல்படுத்தப்பட்டதாக போத்தானிக் போலிகிளினிக் இயக்குனர் டாக்டர் பிரதாப் நாயுடு தெரிவித்தார். "கோவிட் -19 ஐ கடக்க அயராது உழைக்கும் முன்னணி தொழிலாளர்களுக்கு தமது கிளினிக்  வழங்கும் #லைட்டிட்ப்ளூ (நீல விளக்கு) சமிக்ஞை. மலேசியர்களாக இருப்பதில் எங்களுக்கு பெருமை சேர்க்கிறது!" கோவிட் -19 உடன் போராடும் நாட்டின் முன்னணி வீரர்களின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமது கிளினிக்  அதன் வளாகத்தின் முன்புறத்தில் ஒரு நீல ஒளியை வைத்தது.

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.