NATIONAL

கோவிட்-19 : 80%க்கும் அதிகமான நோயாளிகளிடம் நோய் அறிகுறிகள் இல்லை

24 ஏப்ரல் 2020, 1:52 AM
கோவிட்-19 : 80%க்கும் அதிகமான நோயாளிகளிடம் நோய் அறிகுறிகள் இல்லை

புத்ராஜெயா, ஏப்.24-

நாட்டில் உள்ள கோவிட்-19 நோயாளிகளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோரிடம் அத்தொற்றுக்கான அற்குறி எதுவும் இல்லை அல்லது சிறிது மட்டுமே காணப்படும் 1ஆம் மற்றும் 2ஆம் பிரிவு நோயாளிகளாக உள்ளனர் என்று சுகாதரா தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹீஷாம் அப்துல்லா கூறினார்.

“ஒருவர் தொடக்க கட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டால், அவரிடம் தொற்றுக்கான அறிகுறிகள் எதும் தென்படவில்லை என்றாலும் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து கண்காணிக்கப்படுவார்” என்று அவர் விவரித்தார்.

“80 விழுக்காட்டிற்கும் அதிகமான நோயாளிகள் முதலாம் இரண்டாம் பிரிவு நோயாளிகளாக உள்ளன. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சில நாடுகளில் இத்தகையோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் வீட்டிலேயே கண்காணிக்கப்படுகின்றனர் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நோர் ஹிஷாம் விளக்கினார்.

அமெரிக்காவில் சில நோயாளிகளின் மத்தியில் ரத்த உறைதல், பக்கவாதம் போன்ற சம்பவங்கள் ஏற்படுவது குறித்து வினவப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.