NATIONAL

பிகேபி ஆணையை பின்பற்றி கோவிட்-19 தொற்றை எதிர்கொள்வோம்!

16 ஏப்ரல் 2020, 2:53 AM
பிகேபி ஆணையை பின்பற்றி  கோவிட்-19 தொற்றை எதிர்கொள்வோம்!

ஷா ஆலம், ஏப்.16-

கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்க அரசாங்கம் பிரகடணப்படுத்தியுள்ள நடமாட்ட கட்டுப்பாடு ஆணையை அனைவரும் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோரிக்கை விடுத்தார். நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) மூலம் தொற்று பரவலை வெற்றிகரமாக கண்காணிக்கும் நாடாக அனைத்துலக அமைப்புகள் மலேசியாவை அங்கீகரித்துள்ளன என்றார் அவர்.

இந்த தொற்றை எதிர்கொள்ள அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, மாநிலத்தில் பதவி செய்யப்பட்ட 1,231 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று புள்ளிவிபர வரைப்படத்தை மேற்கோள் காட்டி அமிருடின் கூறினார். இதனிடையே இந்தத் தொற்று பரவலை எதிர்த்து தொடர்ந்து அல்லும் பகலும் போராடும் முன் வரிசையாளர்களுக்கு அமிருடின் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.