NATIONAL

முதல், இரண்டாம் கட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மீறினர் -14,922 பேர் கைது

15 ஏப்ரல் 2020, 6:40 AM
முதல், இரண்டாம் கட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மீறினர் -14,922 பேர் கைது

ஷா ஆலாம், ஏப். 15-

முதலாவது மற்றும் நேற்று முடிவுற்ற இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய 14,922 பேர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ ஹூசிர் முகமது கூறினார்.  மார்ச் 18 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நீடித்த முதல் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 3,627 பேரும் இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 11,295 பேரும் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

"இக்காலக் கட்டத்தில் 5,830 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட வேளையில் அறுவர் நியாயமான காரணமின்றி வீட்டிற்கு வெளியே இருந்த காரணத்திற்காக இரு முறை கைது செய்யப்பட்டதாக அரச மலேசிய போலீஸ் முகநூலில் நேரடி அஞ்சல் செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் விவரித்தார். மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு பாதுகாப்பு உயர்நிலை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்ததற்கு ஏற்ப போலீஸ் சட்டவிதிகளை மீறுவோரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டும் என்று ஹூசிர் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.