NATIONAL

கோவிட்-19 பரவல்: உலு லங்காட், கிள்ளானில் அதிகளவு புதிய சம்பவங்கள் பதிவு!

8 ஏப்ரல் 2020, 5:03 AM
கோவிட்-19 பரவல்:  உலு லங்காட், கிள்ளானில் அதிகளவு புதிய சம்பவங்கள் பதிவு!

ஷா ஆலம், ஏப்.8-

சிலாங்கூரில் கோவிட்-19 பரவல் அதிகளவில் பதிவு செய்யப்பட்ட பகுதிகளாக உலு லாங்காட் மற்றும் கிள்ளான் திகழ்வதாக மாநில தயார் நிலை மற்றும் பேரிடர் நடவடிக்கை மையம் கூறியது.

நேற்றிரவு 7,45 மணி வரையில் கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்களின்படி அவ்விரு வட்டாரங்களிலும் முறையே 18 மற்றும் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அந்த மையம் தெரிவித்தது.

இவைத் தவிர்த்து சிப்பாங்கில் 7 சம்பவங்களும் பெட்டாலிங்கில் சம்பவங்களும் கோம்பாக்கில் 1 சம்பவமும் புதிதாக நேற்று பதிவாகியதாக அது குறிப்பிட்டது. ஆயினும், கோல லங்காட், உலு சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் ஆகியவற்றில் புதிய சம்பவங்கள் ஏதும் நேற்று பதிவாகவில்லை.

அதேவேளையில், உலு லங்காட்டில் கடந்த மார்ச் 31ஆம் தேதி விதிக்கப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுபாடு தொடர்ந்து நீடித்து வருவாத அந்த மையம் கூறியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.