NATIONAL

கோவிட்-19: சிலாங்கூர் மேலும் 33 சம்பவங்களை பதிவு செய்துள்ளது; மலேசியாவிலே அதிகமான பாதிக்கப்பட்ட மாநிலம் !!!

28 மார்ச் 2020, 11:46 AM
கோவிட்-19: சிலாங்கூர் மேலும் 33 சம்பவங்களை பதிவு செய்துள்ளது; மலேசியாவிலே அதிகமான  பாதிக்கப்பட்ட மாநிலம் !!!

ஷா ஆலம், மார்ச் 28:

சிலாங்கூர் மாநிலத்தில் இன்று 33 கோவிட்-19 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மலேசியாவில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உருவெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு  தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வரை சிலாங்கூர் மாநிலத்தில் 579 கோவிட்-19 சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

" நண்பகல் 12 மணி நேரத்திற்குள் சிலாங்கூர் மிக அதிகமான சம்பவங்கள் பதிவு செய்துள்ளது. சிலாங்கூரில் 33 புதிய நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ள வேளையில் ஜொகூர் மாநிலம் இரண்டாவது இடத்தில் 26 சம்பவங்களை கொண்டுள்ளது. சபா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் 15 வீதம் மற்றும் கிளந்தான் மாநிலத்தில் 10 புதிய நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளது," என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல் தெரிவித்ததாக டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.