NATIONAL

கோவிட்-19 சம்பவங்கள் சிலாங்கூரில் குறைந்தாலும் பிகேபியை பின்பற்ற வேண்டும்- மந்திரி பெசார்

27 மார்ச் 2020, 3:48 PM
கோவிட்-19 சம்பவங்கள் சிலாங்கூரில் குறைந்தாலும் பிகேபியை பின்பற்ற வேண்டும்- மந்திரி பெசார்

ஷா ஆலம், மார்ச் 27:

சிலாங்கூர் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று குறைந்தாலும் பொது மக்கள் நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி நடக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி டத்தோ ஸ்ரீ  பெசார் அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.

முந்தைய நாளில் 75 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று 36 மட்டுமே இருந்தாலும்கூட எதிர் வரும் ஏப்ரல் 14 வரை சிலாங்கூர் வாழ் மக்கள் பிகேபி நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

" நாம் தொடர்ந்து பிகேபி நடவடிக்கையை பின்பற்றி நடக்க வேண்டும். பாதுகாப்பு படையினர் மற்றும் அமலாக்க அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆண்டவன் புண்ணியத்தில் இந்த நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும்," என்று டிவிட்டரில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.