NATIONAL

நெகிழி கழிவு பொருட்கள் இறக்குமதியைக் கட்டுப்படுத்த தேசிய அமலாக்க திட்டம் அறிமுகம்!

10 பிப்ரவரி 2020, 2:02 PM
நெகிழி கழிவு பொருட்கள் இறக்குமதியைக் கட்டுப்படுத்த தேசிய அமலாக்க திட்டம் அறிமுகம்!

கோலாலம்பூர், பிப்.11-

திறந்த வெளி அமலாக்க நடவடிக்கையை ஒருமுகப்படுத்த எரிசக்தி. அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்ற துறை அமைச்சு ‘தேசிய அமலாக்க திட்டத்தை’ தொடக்கி வைத்தது.

உலோக பொருட்கள் இறக்குமதி தொடர்பில் தரக் குறைவான உலோக இறக்குமதியைக் கட்டுபடுத்த வழிகாட்டலையும் அமைச்சு வெளியிட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது சுற்றுச் சூழலைக் கண்காணிப்பது மற்றும் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்வது ஆகியவற்றை வலுவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தூய்மைக்கேட்டிற்கான காரணிகள் தொடர்பான விவேக அமலாக்கம், விவேக தரவு நிர்வாகம் மற்றும் பொது தரவு ஆய்வு போன்றவற்றை வலுப்படுத்துவதே அதன் நோக்கமாகும் என்று அவ்வறிக்கை கூறியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.