NATIONAL

ஒருவர் மற்றொருவரை மதிக்கும் பண்பை நிலைநிறுத்துவீர்! - கோபிந்த் சிங்

15 ஜனவரி 2020, 11:34 PM
ஒருவர் மற்றொருவரை மதிக்கும் பண்பை நிலைநிறுத்துவீர்! - கோபிந்த் சிங்

கோலாலம்பூர், ஜன.16-

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வலுவூட்ட ஒருவர் மற்றொருவரை மதிக்கும் பண்பை நிலைநிறுத்த வேண்டும் தொடர்பு பல்லூடக அமைச்சர் கோபிந்த சிங் டியே பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்த பண்பானது மக்கள் அமைதியாகவும் வளமாக வாழ்வதற்கும் வழி வகுக்கும் என்றார் அவர்.

மலேசியர்களாகிய நாம் பல்வேறு பின்னணி, கலாச்சாரம் மற்றும் சமயங்களைச் சேர்ந்தவர்கள். பிற சமூகத்தை மதிக்கும் நமது பண்பாடே நம்மை நெருக்கமாகவும் ஐக்கியமாகவும் வாழ்வதற்கு காரணமாகியுள்ளது என்ரு அவர் சொன்னார்.

“மலேசிய மக்கள் அனைவரும் தங்கள் கலைக் கலாச்சாரங்களைப் பின்பறவும் சமய நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவதை உறுதிப்படுத்துவது அவசியமாகும்” என்று இங்குள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் லிம் குவான் எங்கும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நாட்டு மக்கள் மத்தியிலான நல்லிணக்கமும் சகிப்புத் தன்மையும் தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்று லிம் குவாங் எங் கும் வலியுறுத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.