NATIONAL

புதிய மலேசியாவை உருவாக்கும் முயற்சியை தொடர்ந்து அரசாங்கம் மேற்கொள்ளும் !!!

31 டிசம்பர் 2019, 8:49 AM
புதிய மலேசியாவை உருவாக்கும் முயற்சியை தொடர்ந்து அரசாங்கம் மேற்கொள்ளும் !!!

கோலா லம்பூர், டிசம்பர் 31:

2020-இல் புதிய மலேசியாவை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என உறுதி கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். 2019-ஆம் ஆண்டு உண்மையிலே பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என ஒத்துக்கொண்ட துணைப் பிரதமர் 2020-இல் அனைவரும் மக்களுக்கு பலன் தரும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே, தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு தமது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் மலேசிய மக்கள் அனைவரும் ஒருமைப்பாட்டை பேணிக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறுகிய சித்தாந்தத்தை தவிர்த்து மதம் மற்றும் இனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எழுப்பி வரும் தரப்பினர் மீது கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர்கள் நாட்டில் இனரீதியான பதற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

#பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.