NATIONAL

2020 ஆண்டில் பாக்காத்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய சரியான காலகட்டம் !!!

14 டிசம்பர் 2019, 8:16 AM
2020 ஆண்டில் பாக்காத்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய சரியான காலகட்டம் !!!

பட்டர்வெத், டிசம்பர் 14:

எதிர் வரும் 2020-இல் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் மீதமுள்ள 40% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய முக்கிய காலகட்டம் என நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். இதற்கு முன், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பாக்காத்தான் 59% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள வாக்குறுதிகள் 2023-க்குள் நிறைவேற்ற வேண்டும் என்று ஜனநாயக செயல்கட்சியின் பொதுச் செயலாளருமான குவான் எங் கூறினார்.

" 2020-ஆம் ஆண்டு நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய தொடக்கமாக அமையும். இதன் மூலம் எதிர் வரும் 2023-க்குள் எல்லா வாக்குறுதிகளையும் செய்து முடிக்க முடியும்," என்று பட்டர்வெத் டிஜிட்டல் நூலகத்திற்கு வருகை புரிந்த போது செய்தியாளர்களிடம் இவ்வாறு அவர் பேசினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.