NATIONAL

பிளஸ் நிறுவனத்தை எடுத்துக் கொள்ள மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

12 டிசம்பர் 2019, 12:03 AM
பிளஸ் நிறுவனத்தை எடுத்துக் கொள்ள மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

கோலாலம்பூர், டிச.12-

பிளஸ் நெடுஞ்சாலை நிறுவனத்தை எடுத்துக் கொள்ள விருப்பம் கொண்டுள்ள தரப்பினர் தங்கள் துல்லிதமான குத்தகை விண்ணப்பத்தை மீண்டும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கலாம் என்று பொதுப் பணி அமைச்சர் பாரு பியான் தெரிவித்தார்.

இது குறித்து அரசாங்கம் முடிவெடுப்பதற்கு முன்னர் அனைத்து விவரங்களை மீண்டும் பரிசீலிக்குமாறு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

எனினும், இவ்விவகாரத்திற்கு எந்தவொரு காலக் கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.இந்த நெடுஞ்சாலை நிறுவனத்தை எடுத்துக் கொள்வது தொடர்பில் இதுவரை 5 விண்ணப்பங்களை அரசாங்கம் பெற்றிருப்பதாக மலேசிய பூமிபுத்ரா குத்தகையாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் நடந்த விருந்துபசரிப்பில் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக நாட்டின் பிரசித்தி பெற்ற நான்கு நிறுவனங்களின் குத்தகை விண்ணப்பங்களைப் பெற்றிருப்பதாக புத்ராஜெயா உறுதிப்படுத்தியிருந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.