NATIONAL

பக்காத்தான் அதிகமான வெற்றிகளை பெற்றுள்ளது ஆனால் மக்கள் அவற்றை உணரவில்லை!

9 டிசம்பர் 2019, 4:55 AM
பக்காத்தான் அதிகமான வெற்றிகளை பெற்றுள்ளது ஆனால் மக்கள் அவற்றை உணரவில்லை!

ஷா ஆலம், டிச. 9:

புத்ராஜெயாவைக் கைப்பற்றி ஓராண்டுக்கு மேலாகியுள்ள நிலையில் பக்காத்தான் அரசாங்கம் அதிகமான வெற்றிகளை அடைந்துள்ளது, ஆயினும் மக்கள் அவற்றை உணரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இது மக்களுடனான தொடர்பு முறையில் காணப்படும் பலவீனமாகும் என்று மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபாக்ருலாஸி முகமது மொக்தார் கூறினார்.

“பக்காத்தான் அரசாங்கம் உருவாகி ஒரு வருடம் ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டின் தலைமைத்துவம் பல்வேற்று மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதோடு பல வெற்றிகளையும் ஈட்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இதன் சொந்த பலவீனம் காரணமாக இவையாவும் மக்கள் உணராமல் இருக்கின்றனர்” என்றார் அவர்.

ஆட்சியை நாம் கைப்பற்றுவதற்கு முன்ன ஊடகங்கள் நம் அதிகாரத்தில் இல்லை. ஆயினும், உலகின் மிகப் பெரிய மலாய் கட்சியை வீழ்த்தி சாதனை படைத்தோம் என்று அவர் நினைவுகூர்ந்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.