NATIONAL

சின் பெங் அஸ்தியைக் கொண்டு வருவதற்கான எந்தவொரு விண்ணப்பத்தையும் பெறவில்லை!

27 நவம்பர் 2019, 7:31 AM
சின் பெங் அஸ்தியைக் கொண்டு வருவதற்கான எந்தவொரு விண்ணப்பத்தையும் பெறவில்லை!

ஷா ஆலம், நவ.27-

மலாயா கம்யூனிஸ்ட் தலைவர் சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவிற்குள் கொண்டு வருவதற்கான எந்தவொரு விண்ணப்பத்தையும் அரசாங்கம் பெறவில்லை என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஜீஸா வான் இஸ்மாயில் கூறினார்.

இவ்விவகாரம் குறித்து புலன் விசாரணை நடத்துப்படி சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

“காலஞ்சென்ற சின் பெங்கின் அஸ்தியை நாட்டிற்குள் கொண்டு வருதற்கான எந்தவொரு விண்ணப்பத்தையும் நாங்கள் பெறவில்லை” என்றார் அவர்.

நமக்கும் உணர்விருக்கிறது. முன்னாள் வீரர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் நாம் அறிவோம். எனவே , விசாரணையின் முடிவுக்காக காத்திருப்போம் என்று இங்குள்ள கொன்கார்ட் தங்கும் விடுதியில் நடைபெற்ற விவேக மாநகருக்கான விவேக தொழில்நுட்ப உச்ச மாநாட்டை தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.