NATIONAL

பட்டதாரி உணவு வங்கி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

27 நவம்பர் 2019, 3:54 AM
பட்டதாரி உணவு வங்கி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

கோலாலம்பூர், நவ.27-

21 பொது பல்கலைக்கழகங்களில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி அமல்படுத்தப்படும் பட்டதாரிகள் உணவு வங்கி திட்டத்தில் 6,870 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டமானது மாணவர்கள் குறிப்பாக பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்துவதற்கு உதவியுள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை துணை அமைச்சர் சோங் சியெங் ஜென் கூறினார்.

நன்கொடையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக தரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பின் வழி இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இது மாணவர்களின் வாழ்க்கைச் செலவினத்தை குறைக்க உதவுகிறது என்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வொ ஒன்றுக்கு பதிலளிக்கை துணையமைச்சர் குறிப்பிட்டார்.

சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் யாஹயா இத்திட்டம் குறித்தும் அதனால் பயனடைந்தவர்கள் குறித்தும் விளக்கம் கோரினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.