NATIONAL

ஹரிமாவ் மலாயாவின் தாக்குதல் ஆட்டம் அபாரம்! - மந்திரி பெசார் அமிருடின் பாராட்டு

20 நவம்பர் 2019, 2:37 AM
ஹரிமாவ் மலாயாவின் தாக்குதல் ஆட்டம் அபாரம்! - மந்திரி பெசார் அமிருடின் பாராட்டு

ஷா ஆலம், நவ.20-

2022 உலக கிண்ண தகுதி சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கருடா குழுவை ஹரிமாவ் மலாயா குழு வீழ்த்தியதை மந்திரி பெசார் அமிருடின் ஷாரி பாராட்டினார்.

மலேசிய ஆட்டக்காரர்கள் மிகுந்த நெறியோடு கட்டொழுங்காகவும் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினர் என்றார் அவர்.

“சாபாவி ரஷிட் அடித்த ஃபிரி கிக் அபாரமானது...ஹரிமாவ் மலாயா குழுவிற்கு ஒரு சபாஷ்..இந்தோனேசியாவை 2-0 என்ற கோல் எண்ணிக்கை வீழ்த்தினர்” என்றும் அவர் தமது டூவிட்டரில் தெரிவித்தார்.

இதுவரை ஐந்து ஆட்டங்களை ஆடியுள்ள மலேசியாவிற்கு இவ்வெற்றி மூலம் மேலும் மூன்று புள்ளிகள் கிட்டியுள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.