NATIONAL

மாட் சாபு: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டுவிட மாட்டோம்

17 நவம்பர் 2019, 3:58 AM
மாட் சாபு: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டுவிட மாட்டோம்

ஷா ஆலம், நவம்பர் 16:

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தோற்கடிக்கப்பட சூழ்நிலையைக் கண்டு பாக்காத்தான் துவண்டு விடவில்லை என்று தேசிய அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு கூறினார். பாக்காத்தான் அடைந்த தோல்வி மக்களின் தேர்வு ஆகும், ஆகவே இந்த சூழ்நிலையை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.

" இந்த தேர்தலின் முடிவு எங்களது நம்பிக்கையை கொஞ்சமும் அசைக்க முடியாது. மாறாக, தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் மக்களுக்கு தொடர்ந்து சேவையை செய்ய எங்களை ஊக்குவிக்கும்," என்று தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

பாக்காத்தான் அரசாங்கம் தங்களது நிர்வாகத்தை செம்மை படுத்த தூண்டுகோலாக இந்த முடிவு அமைந்திருக்கிறது என்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அரசாங்கமாகவும், மேலும்  பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று மாட் சாபு வலியுறுத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.