NATIONAL

படிப்பைத் தொடராத சிறார்கள் விவகாரம் தீர்க்கப்படுவது அவசியம்!

14 நவம்பர் 2019, 11:36 PM
படிப்பைத் தொடராத சிறார்கள் விவகாரம் தீர்க்கப்படுவது அவசியம்!

ஷா ஆலம், நவ.15-

படிப்பைத் தொடர வேண்டிய அவசியம் மீதான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் டாருல் ஏசான் இஸ்லாமிய மாணவர் சங்கம் (பெப்பியாஸ்) கோரிக்கை விடுத்தது.

பள்ளிப் படிப்பைத் தொடர விரும்பாத மாநிலத்தின் சிறார்கள் விவகாரம் குறித்து தங்கள் தரப்பு கலக்கம் அடைந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அகமது ஃபாஹ்மி அட்ஸா கூறினார்.

விவேக மாநில இலக்கை நோக்கி மாநிலம் நடைபோடும் வேளியில் தொழில்துறை புரசி 4.0க்கு ஏற்ப கல்வி கேள்விகள் அமைந்திட அனைத்து தரப்பினரும் இவ்விவகாரத்தில் அதிக சிரத்தை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்திற்கு அடிப்படை காரணங்களாக வறுமை, நிதி நெருக்கடி, குடியுரிமை பிரச்னை மற்றும் சமூக பிரச்னைகள் இருப்பதாக சில அரசு சாரா அமைப்புகளுடன் இச்சங்கம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.