NATIONAL

வாக்காளர்கள் பொய் செய்திகளை நம்ப மாட்டார்கள்!

7 நவம்பர் 2019, 12:26 PM
வாக்காளர்கள் பொய் செய்திகளை நம்ப மாட்டார்கள்!

பொந்தியான், நவம்பர் 7:

இம்மாதம் 16ஆம் தேதி தஞ்சோங் பியாய் நாடாளுமன்ர தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில், வாக்காளர்கள் பொய்யான செய்திகளை நம்பி முடிவெடுக்கக் கூடாது மாறாக நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் கார்மைனி சார்டினி மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இடைத்தேர்தல் பிரச்சார காலத்தில் சில ஊடகங்கள் வெளியிடும் பொய்யான தகவல்களை திறமையான வாக்காளர்களாக இருப்பின் எளிதில் நம்பிவிட மாட்டார்கள் என்று ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் கூறினார்.

இது தஞ்சோங் பியாய் மக்கள் ஊடகங்களைக் காட்டிலும் திறமையானவர்களாக இருப்பதோடு பொய் தகவல்களால் கவரப் படாமல் இருப்பதை பொறுத்தது என்றார் அவர்.

பரவி பொய் தகவல்கள் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதியை நம்பிக்கை கூட்டணி தக்க வைக்கும் வாய்ப்பை பாதிக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு கிட் சியாங் மேர்கண்டவாறு பதிலளித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.