NATIONAL

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: நடுநிலை வாக்காளர்களே வெற்றியை நிர்ணயிப்பர் !!!

7 நவம்பர் 2019, 1:06 AM
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: நடுநிலை வாக்காளர்களே வெற்றியை நிர்ணயிப்பர் !!!

கோலாலம்பூர், நவம்பர் 7:

மதில் மேல் பூணைப்போல் இருக்கும் 18 விழுக்காட்டு வாக்காளர்களே தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் வெற்றியை நிரணயிப்பர் என்று டாரில் ஏசான் அரசியல் கல்வி மற்றும் ஜனநாயக கழகத்தின் (ஐடிஇ) தலைவர் அமிடி அப்துல் மனான் கூறினார்..

ஊடக தகவல்கள் மற்றும் கட்சிகளின் பிரச்சாரத்தின் அடிப்படையில் முதல் முறை அல்லது இரண்டாவது தடவையாக வாக்களிக்கும் வாக்காளர்களே அவர்கள் என்று அக்கழகம் செய்த ஆய்வில் தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

இத்தரப்பினர் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

ஆயினும் இவர்கள் எடுக்கும் முடிவே அரசாங்கத்திற்கு ஆதரவா அல்லது அதிருப்தியா என்பது தெரியவரும் என்ரு பெர்னாமா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் ருவாங் பிசாரா எனும் நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

இவர்களைத் தவிர்த்து, தங்கல் கட்சிக்கு விசுவாசமாய் இருக்கும் வாக்காளர்களே தஞ்சோங் பியாய் தொகுதியில் அதிகளவில் உள்ளனர் என்றார் அவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.