NATIONAL

தேசிய விளையாட்டு மாதம்: உடற்பயிற்சி நடவடிக்கையில் மந்திரி பெசார் பங்கேற்றார்

14 அக்டோபர் 2019, 4:50 AM
தேசிய விளையாட்டு மாதம்:  உடற்பயிற்சி நடவடிக்கையில் மந்திரி பெசார் பங்கேற்றார்

ஷா ஆலம், அக். 14-

தேசிய விளையாட்டு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற உடற்பயிற்சி நடவடிக்கையின் போது மாநில அரசு பணியாளர்களுடன் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அளவளாவினார். உலு லங்காட் மாவட்ட நில அலுவலகத்தின் டேவான் ஜுப்ளி பேராக் உள்ளரங்கத்தில் மாநில இளையோர் மற்றும் விளையாட்டு துறை இலாகா பணியாளர்கள் தலைமையில் இந்த உடற்பயிற்சி நடைபெற்றது.

மக்கள் மத்தியில் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் மாநில அரசின் நோக்கத்திற்கு ஏற்ப அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெற்று இந்த உடற்பயிற்சி நடவடிக்கை அமல்படுத்தப்படுகிறது.

மாநில அளவிலான தேசிய விளையாட்டு மாத இயக்கத்தை மந்திரிபெசார் அமிருடின் ஷாரி அதிகாரப்புர்வமாகத் தொடக்கி வைத்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.