NATIONAL

பிடி3 தேர்வை எழுதும் மாணவர்களுக்கு மந்திரி பெசார் வாழ்த்து!

2 அக்டோபர் 2019, 5:09 AM
பிடி3 தேர்வை எழுதும் மாணவர்களுக்கு மந்திரி பெசார் வாழ்த்து!

ஷா ஆலம், அக்.2-

செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிடி 3 தேர்வை எழுதும் மூன்றாம் படிவ மாணவர்களுக்கு சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“இத்தேர்வில் சிறந்த முறையில் பதிலளிக்கும் வகையில் இவர்கள் யாவரும் நல்ல உடல் நலத்துடனும் அறிவாற்றலுடனும் இருக்க வேண்டும்” என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் அமிருடின் குறிப்பிட்டுள்ளார்.

“உங்களுடைய பெற்றோரின் ஆட்சியும் உங்கள் வெற்றிக்கு துணையாக இருக்கட்டும். இத்தேர்வில் நீங்கள் அடையவிருக்கும் சிறந்த தேர்ச்சி உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு சிறந்த அடித்தளமிடட்டும்” என்றும் அவர் வாழ்த்தினார்.

சிலாங்கூரில் மொத்தம் 74,935 மாணவர்கள் 326 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.