NATIONAL

எம்பிஎஸ்பி வங்கி ஏற்பாட்டில் ஊடகவியலாளர் போலீங் போட்டி

23 செப்டெம்பர் 2019, 4:00 AM
எம்பிஎஸ்பி வங்கி ஏற்பாட்டில் ஊடகவியலாளர் போலீங் போட்டி

பெட்டாலிங் ஜெயா, செப்.23-

பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஊடகவியாளர்கள் ஒன் உத்தாமா, வங்சா போலில் நடைபெற்ற எம்பிஎஸ்பி வங்கியின் போலிங் போட்டியில் பங்கேற்றனர்.

ஊடகங்களுடனான நல்லுறவை வலுவூட்டும் நோக்கத்திற்காக பெர்னாமாவுடன் இணைந்து எம்பிஎஸ்பி வங்கி இப்போட்டியை ஏற்பாடு செய்தது.

பொது மக்கள் மத்தியில் இவ்வங்கி குறித்து தகவல்கள் சென்றடைய உதவிய ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக பெர்னாமா நிர்வாகி டத்தோஸ்ரீ அஸ்மான் யுஜாங் கூறினார்.

இரு தரப்புக்கும் இடையிலான உறவு சிறப்படைவதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் பெரும் ஊக்குவிப்பாக அமையும் என்றும் அவர் சொன்னார். இப்போட்டியில் பெர்னாமா, டிவி3, எண்டிவி7, டிவி9, ஆர்டி எம், பெரிதா ஹாரியான், உத்துசான் மலேசியா போன்ற ஊடகங்களும் கலந்து கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.