NATIONAL

பேரா பிகேஆர் தலைவரைத் தேடுவதில் பேரா போலீஸ் படை உதவத் தயார் !!!

10 செப்டெம்பர் 2019, 5:50 AM
பேரா பிகேஆர் தலைவரைத் தேடுவதில் பேரா போலீஸ் படை உதவத் தயார் !!!

பாரிட், செப்.10-

தலைமறைவாகியுள்ளாபேரா, பிகே ஆர் தலைவர் ஃபார்ஹாஸ் வாஃபாயைக் கண்டுபிடிக்க பேரா மாநில காவல் துறை தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அம்பாங்கில் உள்ள ஒரு விளையாட்டு கம்பிளேக்ஸில் நடைபெற்ற தாக்குதல் குறித்த விசாரணை தொடர்பில் தேடப்படும் ஃபார்ஹாஸ் தலைமறைவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபார்ஹாஸ் குறித்த விவரத் தரவுகள் உட்பட அனைத்து வகையான உதவிகளையும் செய்யத் தமது தரப்பு தயாராக இருப்பதாக பேரா போலீஸ் படைத் தலைவர் டத்தோ ரஸாருடின் ஹூசேய்ன் கூறினார்.

முன்னதாக, செய்த புகாரை ஃபார்ஹாஸ் திரும்பப் பெற்று கொண்ட போதிலும் அவரைத் தேடும் படலம் தொடரும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ஹமிட் பாடோர் கடந்த ஞாயிறன்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.