NATIONAL

யுகேஎம் பல்கலைக்கழத்திற்கு அனைத்துலக அங்கீகாரம்

5 செப்டெம்பர் 2019, 4:21 AM
யுகேஎம் பல்கலைக்கழத்திற்கு அனைத்துலக அங்கீகாரம்

ஷா ஆலம், செப்.5-

அனைத்துலக வர்த்தக மேம்பாடடைந்த கல்லூரி பள்ளி சங்கத்திடம் (ஏஏசிஎஸ்பி) இருந்து அனைத்துலக தரத்திலான அங்கீகாரத்தை மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் (யுகேஎம்) பட்டப்படிப்பு கல்வி மையம் பெற்றது.

இந்தப் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதால் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக ஏஏசிஎஸ்பி அங்கீகாரக் குழு தலைமை அதிகாரியும் நிர்வாக தலைவருமான ஸ்டெபெனி எம். பிரையன்ட் கூறினார்.

ஆராய்ச்சி துறை, கற்பித்தல், புறப்பாட கல்வி மற்றும் மாணவர் கற்றல் ஆகியவற்றிள் இப்பல்கலைக்கழகம் சிற்ந்த அடைவு நிலையைக் கொண்டுள்ளது என்றார் அவர்.

இந்த அங்கீகாரத்திற்கு தகுதி பெற்றதற்காக யுகேஎம் டீன் பேராசிரியர் டாக்டர் புவான் யாத்திமை பாராட்டும் அதேவேளையில், இந்த அடைவுநிலைக்கு பங்களித்த நிர்வாகம், துறை உறுப்பினர்கள், யுகேஎம் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் வாழ்த்துகள் என்று அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் ஸ்டெபெனி கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.