NATIONAL

இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இன்றைய பேரணி ரத்து!!!

24 ஆகஸ்ட் 2019, 5:15 AM
இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இன்றைய பேரணி ரத்து!!!
இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இன்றைய பேரணி ரத்து!!!

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 23: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு எதிரான எதிர்ப்புக் கூட்டம் இன்று நடைபெறாது என்று அதன் ஏற்பாட்டாளர் சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்து பாடத்தை அறிமுகப்படுத்துவதை எதிர்த்து முதலாவது எதிர்ப்புக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு லிட்டில் இந்தியாபிரிக்பீல்ட்ஸில் நடைபெற்றது.

பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடமிருந்து தமக்கு தொலைபேசி அழைப்பு வந்த பின்னர், இந்தக் கூட்டத்தை இரத்து செய்ய முடிவு செய்ததாக சங்கர் கணேஷ் தெரிவித்தார்.

அன்வார் இப்ராகிம் என்னை அழைத்து எதிர்ப்புக் கூடத்தை இரத்து செய்யச் சொன்னார்அவர் இந்திய சமூகத்திற்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார்இந்த பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசிக்க அடுத்த வாரம் அவரைச் சந்திக்க ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாகக் கூறினார். அவரது கோரிக்கைக்கு நான் ஒப்புக் கொண்டேன்அவருடைய வாக்குறுதியில் நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன்” என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

மேலும்காவல் துறையினரின் அனுமதி பெற ஏற்பாட்டாளர் தவறியதால் இன்று நடைபெற இருந்த கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக சங்கர் தெரிவித்தார்.

அனுமதி இல்லாமல்எந்தவொரு பிரச்சனையினாலும் மக்கள் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லைநான் அனுமதியுடன் கூட்டத்தை ஏற்பாடு செய்ய விரும்புகிறேன்,” என்று அவர் விளக்கினார்.

இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெற இருந்த ‘ஜாகிர் நாயக் தேவையில்லை, இந்தியர்களுக்கும் பிற இனங்களுக்கும் சம உரிமைகள்‘ எதிர்ப்புக் கூட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று பல தரப்பினரிடமிருந்து அழைப்புக் கிடைத்ததாக சங்கர் கூறினார்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.