NATIONAL

மாநில ஆட்சிக்குழு கூட்டத்தின் தகவல்களை வெளியிட்ட அரசியல்வாதி மீது குற்றப்பத்திரிகை

23 ஆகஸ்ட் 2019, 1:46 PM
மாநில ஆட்சிக்குழு கூட்டத்தின் தகவல்களை வெளியிட்ட அரசியல்வாதி மீது குற்றப்பத்திரிகை

ஈப்போ, ஆகஸ்ட் 23:

பேராக் மாநில பொது போக்குவரத்து, உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் தோட்டப்புற விவகாரங்களின் ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் யூனுஸ் ஜம்ஹாரி மீது கொண்டு வரப்பட்ட விசாரணை அறிக்கையை மாநில குற்றவியல் இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று பேராக் மாநில காவல்துறை தலைவர் டத்தோ ரஸாரூடின் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் தமது தரப்பினர் விசாரணை அறிக்கையை அனுப்பி விட்டது என உறுதிப் படுத்தினர்.

கடந்த ஜூலை 13-இல் அப்துல் யூனுஸ் ஜம்ஹாரியின் சிறப்பு அதிகாரி பே யோங் கீன் ஈப்போ மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தின் தகவல்களை வெளியிட்டார் என்று புகார் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- BERNAMA

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.