NATIONAL

புக்கிட் அமானில் 2ஆவது முறையாக ஜாகீர் நாய்க் வாக்குமூலம் பதிவு

19 ஆகஸ்ட் 2019, 3:51 AM
புக்கிட் அமானில் 2ஆவது முறையாக ஜாகீர் நாய்க் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர், ஆக.19-

வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக சமய போதகர் டாக்டர் ஜாகீர் நாய்க் இரண்டாவது முறையாக அழைக்கப்பட்டார் என்று புக்கிட் அமான் குற்றப் புலன் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோ ஹூஸிர் முகமது கூறினார்.

இழிவுபடுத்தியதற்காகவும் அமைதியை சீர்குலைக்க முயன்றதற்காகவும் குற்றவியல் சட்டம் 506இன் கீழ் அவரது வாக்குமூலம் திங்கள்கிழமை பிற்பகலில் பதிவு செய்யப்பட்டது என்றார் அவர்.

கடந்த வெள்ளிக்கிழ்மை ஜாகீர் முதல் முறையாக புக்கிட் அமானில் தனது வாக்குமூலத்தை பதவி செய்தார் என்றும் அதன் தொடர்ச்சியாகவே திங்கள்கிழமை வாக்குமூலம் அமைந்தது என்றும் அவர் சொன்னார்.

கிளந்தான், கோத்தா பாருவில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி உரையாற்றிய ஜாகீர் மலேசியாவில் உள்ள இந்தியர் மற்றும் சீனர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் என்று கூறப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.