NATIONAL

ஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்

18 ஆகஸ்ட் 2019, 10:50 AM
ஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்

ஜோகூர் பாரு , ஆகஸ்ட் 18:

அந்நிய நாட்டு சமய போதகர் ஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமையை மீட்டுக் கொள்ளும் முழு உரிமை அமைச்சரவைக்கு மட்டுமே உள்ளது என்று வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ மார்ஸூக்கி யாய்யா கூறினார். சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் இந்தியர்கள் மற்றும் சீனர்களை குறித்து தமது சமய பிரச்சாரத்தில் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

" ஸாகீர் நாயக்கை பற்றி நான் கருத்துரைக்க தேவையில்லை ஏனெனில் அவர் மலேசிய பிரஜை அல்ல. ஆகவே, மலேசியர்களிடையே அவரை தொடர்பு படுத்தி சச்சரவு போடுவது வீண் வேலை. அமைச்சரவை ஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கும்,"  என்று ஜோகூர் மாநில பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.