NATIONAL

புகை மூட்டம்: வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வீர்! - அமிருடின் ஷாரி

1 ஆகஸ்ட் 2019, 7:18 AM
புகை மூட்டம்: வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வீர்! - அமிருடின் ஷாரி

ஷா ஆலம், ஆக.1-

வானிலை ஆரோக்கியமாக இல்லாத வேளைகளில் மக்கள் தங்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார். அதே வேளையில், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முக கவசத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அமிருடின் தமது முகநூலில் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புகை மூட்டக் காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் மேலும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதனிடையே, கிள்ளானில் ஜோஹான் செத்தியா பகுதியின் காற்றுத் தூய்மைக்கேடு அளவு 106 என்று பதிவாகியுள்ளதாகவும் இது மிகவும் ஆரோக்கியமற்ற நிலை என்றும் மலேசிய காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டு இணையத்தளம் தெரிவித்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.