NATIONAL

பிகேஆர் கட்சியில் இருந்து ஹாஸிக் நீக்கம்!

3 ஜூலை 2019, 11:31 PM
பிகேஆர் கட்சியில் இருந்து ஹாஸிக் நீக்கம்!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4-

பிகேஆர் கட்சியில் இருந்து ஹாஸிக் அப்துல்லா உடனடியாக நீக்கப்பட்டதாக அதன் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஹாஸிக்கை கட்சியின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கும் முடிவு நேற்றிரவு நடைபெற்ற கட்சியின் அரசியல் பிரிவு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

“ஹாஸிக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கட்டொழுங்கு வாரியம் பரிந்துரை செய்தது. அம்முடிவை ஏற்றுக் கொண்ட அரசியல் பிரிவு அவரை உடனடியாக நீக்கியது” என்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் தெரிவித்தார்.

வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியதன் வழி கட்சியின் கட்டொழுங்கு விதியை ஹாஸிக் மீறியதோடு பாலியல் காணொளியில் காணப்படும் மற்றொரு கெஅடிலான் தலைவர் தாம் என்றும் ஒப்புக் கொண்டுள்ளதால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக கட்டொழுங்கு வாரியத் தலைவர் டத்தோ அகமது காசிம் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.