NATIONAL

மாமன்னர் அரியணை அமரும் நிகழ்வை முன்னிட்டு ஜூலை 30இல் பொது விடுமுறை

28 ஜூன் 2019, 4:34 AM
மாமன்னர் அரியணை அமரும் நிகழ்வை முன்னிட்டு ஜூலை 30இல் பொது விடுமுறை

ஷா ஆலம், ஜூன் 28-

நாடு முழுவதும் வரும் ஜூலை 30ஆம் தேதி பொது விடுமுறை என்று அரசாங்கம் அறிவித்தது. 16ஆவது மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா அரியணை அமரும் நிகழ்வை முன்னிட்டு இந்த பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் பாக்கார் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த கூடுதல் பொது விடுமுறையானது 1951ஆம் ஆண்டு பொது விடுமுறை சட்டத்தின் 16ஆவது பிரிவின் கீழ் தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேசத்திலும் பிரகடனப்படுத்தப் பட்டிருப்பதாக அவர் கூறினார். சபா மற்றும் சரவாக்கில் சம்பந்தப்பட்ட மாநில சட்ட விதிகளுக்கு ஏற்ப அம்மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் சொன்னார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.