NATIONAL

எஸ்பிஆர்எம் புதிய தலைவர் லத்தீபா பதவி உறுதிமொழி

25 ஜூன் 2019, 4:29 AM
எஸ்பிஆர்எம் புதிய தலைவர் லத்தீபா பதவி உறுதிமொழி

கோலாலம்பூர், ஜூன் 25-

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா முன்னிலையில் எஸ்பிஆர்எம்மின் புதிய தலைவராக லத்தீஃபா பீபி கோயா இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 2021ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரையிலான ஈராண்டு ஒப்பந்த அடிப்படையில் எஸ்பிஆர்எம்மின் 14ஆவது தலைவரான லத்தீஃபாவின் நியமனக் கடிதத்தை சுல்தான் அப்துல்லா எடுத்து வழங்கினார்.

2020 மே 17ஆம் தேதி தனது ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்னரே தலைவர் பதவியை ராஜினாமா செய்த டத்தோஸ்ரீ முகமது சுக்ரி அப்துல்லுக்குப் பதிலாக லத்தீஃபா இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

லண்டன் பல்கலைக்கழக சட்டத்துறை இளங்கலை பட்டதாரியான இவர் சுதந்திரத்திற்கான வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைமை இயக்குநராகவும் பிகேஆர் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்றிருந்தார்..

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.