NATIONAL

மகாதீர் – அன்வார் சந்திப்பு: அதிகார மாற்றம் குறித்து பேசப்படவில்லை!

24 ஜூன் 2019, 11:45 PM
மகாதீர் – அன்வார் சந்திப்பு: அதிகார மாற்றம் குறித்து பேசப்படவில்லை!

கோலாலம்பூர், ஜூன் 25-

பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது அதிகார மாற்றம் குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அந்தச் சந்திப்பின்போது வழக்கமான விவகாரங்கள் குறித்து மட்டுமே தாங்கள் விவாதித்ததாக டாக்டர் மகாதீர் கூறினார்.

“நாங்கள் சாதாரணமாகத் தான் பேசினோம். வேறொன்றும் இல்லை. அதிகார மாற்றம் பற்றி பேசவில்லை” என்று மாஜூ ஹோல்டிங்ஸ் திறந்த இல்ல உபசரிப்பின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, சிஎன்பிசி செய்தி நிலையத்திற்கு அளித்த பேட்டியில் நாட்டின் கடன் தொகையானது உள்நாட்டின் மொத்த உற்பத்தியின் 80 விழுக்காடாக உள்ளது. இதை 54 விழுக்காடாக குறைப்பதற்கு மூன்றாண்டுகள் தேவை என்று பிரதமர் மகாதீர் கூறினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.