NATIONAL

பெர்னாமா தமிழ்ச்செய்திகள் ஓராண்டு நிறைவு; வேதமூர்த்தி மனமகிழ்ச்சி !!!

12 ஜூன் 2019, 1:34 AM
பெர்னாமா தமிழ்ச்செய்திகள் ஓராண்டு நிறைவு; வேதமூர்த்தி மனமகிழ்ச்சி !!!

புத்ராஜெயா, ஜூன் 11:

தொலைக்காட்சியில் பெர்னாமா தமிழ்ச் செய்தி அறிக்கை மறு வடிவம் கொண்டு புத்துயிர் பெற்று தமிழ் நேயர்களின் ஆதரவுடன் வலம் வந்த நிலையில் தற்பொழுது ஓராண்டு நிறைவை எட்டுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

2001-ஆம் ஆண்டில் 15 நிமிட செய்தி அறிக்கையுடன் தொடங்கப்பட்ட பெர்னாமா தமிழ்ச் செய்தி அறிக்கை, தொடர்ந்து ஆஸ்ட்ரோ-வுடன் இணைந்து தொலைக்காட்சி சேவை வழங்கி வந்தாலும் 2015-ஆம் ஆண்டில் பல்வேறு சூழல் காரணமாக நிறுத்தப்பட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்பிக்கை கூட்டணி தலைமையில் புத்தாட்சி மலர்ந்து தகவல் – பல்லூடக ஒளிபரப்புத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள கோபிந்த் சிங் டியோ முயற்சியில் பெர்னாமா தமிழ்ச் செய்தி அறிக்கை 2018, ஜூன் 11-ஆம் நாள் முதல் மீண்டும் ஒளிபரப்பைத் தொடங்கியது.

தற்பொழுது ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் பெர்னாமா தமிழ்ச் செய்தி ஒலிபரப்பு சேவையைப் பாராட்டுவதாக ஒற்றுமைத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.