NATIONAL

லத்தீஃபா கோயா இனி கெஅடிலான் உறுப்பினர் இல்லை

5 ஜூன் 2019, 9:28 AM
லத்தீஃபா கோயா இனி கெஅடிலான் உறுப்பினர் இல்லை

புத்ராஜெயா, ஜூன் 6-

கெஅடிலான் கட்சியின் உறுப்பினர் அந்தஸ்தில் தாந் விலகுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) புதிய தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் லத்தீஃபா பீபி கோயா அனுப்பிய கடிதத்தை தாங்கள் பெற்றுவிட்டதாக அக்கட்சி தலைமையகம் தெரிவித்தது.

கெஅடிலான் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு முகவரியிட்ட அக்கடிதம் மின் அஞ்சல் வழியாக அனுப்பட்டது என்று கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபூடின் நசுத்தியோன் கூறினார்.

“லத்தீஃபா கோயாவின் தற்போதைய நிலை குறித்து கூறுவதானால், இந்த அறிக்கையை நான் வெளியிடும் வேளையில், அவர் கட்சியின் உறுப்பினர் இல்லை” என்று ஸ்ரீபெர்டானாவில் நடைபெற்ற பிரதமரின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நசுத்தியோன் தெரிவித்தார்.

“ஹாஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியா சென்றுள்ள அன்வார் இப்ராஹிம் இன்னும் நாடு திரும்பாததால், அந்த மின் அஞ்சலை அவர் இன்னும் வாசிக்கவில்லை” என்றும் அவர் சொன்னார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.