NATIONAL

தாமான் ரிம்பா கியாரா மீதான புகார் விசாரிக்கப்படவில்லையா? எஸ்.பி.ஆர்.எம். மறுப்பு

21 மே 2019, 7:18 AM
தாமான் ரிம்பா கியாரா மீதான புகார் விசாரிக்கப்படவில்லையா? எஸ்.பி.ஆர்.எம். மறுப்பு

கோலாலம்பூர், மே 21-

தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள தாமான் ரிம்பா கியாரா மேம்பாட்டுத் திட்டம் மீதான புகாரை விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) மறுத்தது.

இந்த விவகாரம் குறித்து தாங்கள் இதற்கு முன்னர் விசாரணை நடத்தியதாக எஸ்.பி.ஆர்.எம் துணை ஆணையர் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

“இந்தப் புகார் மீது இந்த ஆணையம் ஏற்கனவே விசாரணை செய்துவிட்டது. நாங்கள் விசாரணை நடத்தவில்லை என்ற சில தரப்பினரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. ஆயினும், இவ்வழக்கு தொடர்பில் புதிய ஆதாரம் ஏதும் சமர்ப்பிக்கப்பட்டால் ஆணையம் மீண்டும் விசாரணை நடத்தும்” என்றார்.

இதைத் தவிர்த்து, இந்த வழக்கு குறித்து சில தரப்புகளிடம் இருந்து மேலும் சில தகவல்களைப் பெறுமாறு தமது அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அந்த விபரங்கள் அரசாங்க துணை பப்ளிக் பிராசிகியூட்டரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.