NATIONAL

சொத்து விபரம் அறிவிப்பு கேபிஐ குறியீட்டில் சேர்க்கப்படும்! - துன் மகாதீர்

14 மே 2019, 7:16 AM
சொத்து விபரம் அறிவிப்பு கேபிஐ குறியீட்டில் சேர்க்கப்படும்! - துன் மகாதீர்

புத்ரா ஜெயா, மே 14-

தேசிய ஊழல் தடுப்பு திட்டம் மற்றும் சொத்துகளை அறிவிப்பது ஆகியவை முக்கிய அடைவு நிலை குறியீட்டில் (கேபிஐ) சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய நிர்வாக ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஊழல் தடுப்பு மையம் (ஜிஐஏசிசி) அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.

அதே வேளையில், தங்கள் அமைச்சின் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் அனைவரும் தங்கள் சொத்து விபரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தெரிவிப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த சொத்து அறிவிப்பு நடைமுறையானது அமைச்சர் மற்றும் துணை அமைச்சர் என்றளவில் மட்டும் நின்றுவிடாது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ஊழல் தடுப்பு மீதான சிறப்பு அமைச்சரவை செயற்குழுவின் 8ஆவது கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் தெரிவித்தார்.

“அரசாங்கத்தைக் குறை கூறும் அதிகாரத்தைக் கொண்டுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும்” என்றார் அவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.