NATIONAL

வெ.3 லட்சம் கடத்தல் சிகரெட் பறிமுதல்

14 மே 2019, 5:12 AM
வெ.3 லட்சம் கடத்தல் சிகரெட் பறிமுதல்

ஷா ஆலம், மே 14-

தெலுக் பங்ளிமா, ஜாலான் பந்திங் கிள்ளானில் கிள்ளான் துறைமுக கடற்கரை காவல் படை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 307,382,.82 வெள்ளி மதிப்பிலான 1,251 சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.

சம்பந்தப்பட்ட சிகரெட் பெட்டிகளைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட தோயோத்தா அல்பர்ட் எனும் பல்நோக்கு வாகனமொன்றும் இந்நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டதாக கிள்ளான் துறைமுக நடவடிக்கை பிரிவு அதிகாரி டிஎஸ்பி முகமது கைருடின் ஜமால் தெரிவித்தார்.

தெலுக் பங்ளிமா ஜாலான் பந்திங் கிள்ளானில் சந்தேகிக்கப்படும் வகையில் சென்று கொண்டிருந்த எம்பிவி வாகனத்தைப் பின் தொடர்ந்ததன் மூலம் இந்த கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது என்றார் அவர்.

“தான் பின் தொடரப்படுவதை உணர்ந்த எம்பிவி வாகன ஓட்டுநர் கிள்ளான் நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனத்தை ஆள் நடமாட்டம் இல்லாத சாலைக்குள் செலுத்தினார். ஆனால், அது முற்றுப் பெற்ற சாலை என்பதால் வாகனத்தை விட்டு வெளியேறி ஓடி மறைந்துவிட்டார் ” என்றார் அவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.