NATIONAL

புதிய தொழில்நுட்பத்தில் பரிணமிப்பீர்! - பிரதமர் மகாதீர்

14 மே 2019, 12:13 AM
புதிய தொழில்நுட்பத்தில் பரிணமிப்பீர்!  - பிரதமர் மகாதீர்

புத்ராஜெயா, மே 14:

புதிய யுகத்தில் தாங்கள் பின்தங்கிவிடாமல் இருக்க புதிய தொழில்நுட்பத்துடன் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும்படி பொது மக்களை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேட்டுக் கொண்டார்.

தமது பள்ளி காலத்தைப் போல் இப்போதைய பள்ளி சூழல் இல்லை. இப்போது புதிய யுகத்தில் நாம் பரிணமிக்கிறோம் என்று இங்கு சுல்தான் அப்துல் ஹாமிட் கல்லூரி பழைய மாணவர்கள் சங்க ஒன்று கூடல் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

"இன்று நாம் பள்ளியில் கற்றல் நடவடிக்கைக்கு கணினி போன்ற சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். இதன் வழி இந்த தொழில்நுட்ப பயனீட்டிற்கும் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ளலாம்" என்று மகாதீர் ஆலோசனை கூறினார்.

" அரசாங்கம் ஒரு புதிய முறையை அமல்படுத்தும்போது அதனால் மாணவர்களே அதிக நன்மை அடைவார்கள் "என்றார் மகாதீர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவும் கலந்து கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.