NATIONAL

பொருட்கள் விலை அதிகரிப்புக்கு மத்தியஸ்தர்களும் ஒரு காரணம்

9 மே 2019, 1:35 AM

புத்ரா ஜெயா, மே 9-

சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு மத்தியஸ்தர்களும் ஒரு காரணமாகும் என்று பிரதமர் மகாதீர் கூறுகிறார்.

உதாரணமாக, கேமரன் மலை தோட்டங்களில் கிலோ ஒன்று 50 காசு என்ற விலையில் விற்கப்படும் காய்கறிகள், சந்தையில் கிலோ ஒன்று 7 வெள்ளிக்கு விற்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மூலப்பொருள் மற்றும் சந்தைக்கும் நடுவில் ஏதோ ஒன்று நடைபெறுகிறது. எனவே இவற்றை களைவது அவசியம் என்று சிறப்பு நேர்காணலின் போது மகாதீர் தெரிவித்தார்.

பி40 மற்றும் எம்40 தரப்புகளின் வாழ்க்கைச் செலவின அதிகரிப்புக்கு கடந்த ஓராண்டு ஆட்சி காலத்தில் தீர்வு ஏதும் காணப்படவில்லை என்ற மக்களின் குறைகூறல் குறித்து கேட்டபோது, மேற்கண்ட விளக்கத்தை அளித்தார் மகாதீர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.