NATIONAL

புதிய தலைமை நீதிபதி நியமனம்: ஆட்சியாளர் மன்ற ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்! - மகாதீர்

30 ஏப்ரல் 2019, 6:37 AM
புதிய தலைமை நீதிபதி நியமனம்: ஆட்சியாளர் மன்ற ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்! - மகாதீர்

புத்ரா ஜெயா, ஏப்.30-

நாட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பில் ஆட்சியாளர் மன்ற முடிவிற்காக அரசாங்கம் காத்திருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

ஆயினும், அம்மன்றத்தின் ஒப்புதல் இவ்வார இறுதிக்குள் கிடைத்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“ஆட்சியாளர் மன்றத்தின் ஒப்புதலுக்காக நாம் காத்திருக்கிறோம்” என்றார்’

இவ்வார இறுதிக்குள் அந்த ஒப்புதல் கிடைத்துவிடும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் துறை அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் கூறினார்.

இதுவரையில் நாட்டின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருந்த டான்ஸ்ரீ ரிச்சர்ட் மலாஞ்சும் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.