NATIONAL

2020ஆம் ஆண்டுவாக்கில் எஸ்எம்இ மூலம் வெ.500 பில்லியன் வருவாய்

20 ஏப்ரல் 2019, 1:28 AM
2020ஆம் ஆண்டுவாக்கில் எஸ்எம்இ மூலம் வெ.500 பில்லியன் வருவாய்

கோத்தாபாரு, ஏப்.22-

வரும் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகம் (எஸ்எம்இ) மூலம் நாட்டிற்கு கிடைக்கும் வருமானம் 500 பில்லியன் வெள்ளியை எட்டும் என்று தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எஸ்எம்இ தொழில்முனைவர்கள் கூடுதல் வருமானம் பெறக்கூடிய சந்தை வாய்ப்புகள் மீது அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக இதன் துணையமைச்சர் டத்தோ ஹட்டா முகமது ரம்லி கூறினார்.

தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் தொழில்துறையில் இன்னும் ஈடுபடாதவர்களை இதில் ஈடுபடுவதையும் அமைச்சு ஊக்குவிக்கும் என்றும் அவர் சொன்னார்.

தமது அமைச்சின் கீழ் பதிவுசெய்துள்ள தொழில்முனைவர்களில் 97 விழுக்காட்டினர் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்களாவர் என்று துணையமைச்சர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.