NATIONAL

ரோஸ்மா கைது செய்யப்பட்டார் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

9 ஏப்ரல் 2019, 8:12 AM
ரோஸ்மா கைது செய்யப்பட்டார் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

ஷா ஆலம், ஏப்.9-

முன்னாள் பிரதமர் நஜீப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை குற்றஞ்சாட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் 16ஆம் பிரிவின் கீழ் ரோஸ்மா நாளை குற்றஞ்சாட்டப்படுவார் என்று அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

சூரிய கதிர் ஊழல் தொடர்பான இறுதி விசாரணையில் வாக்குமூலம் அளிக்க மதியம் 1.40 மணிக்கு ஆணையத்திற்கு வந்திருந்த ரோஸ்மாவை மதியம் 1.45 மணிக்கு எஸ்பிஆர்எம் கைது செய்தது.

பின்னர் அவர் எஸ்பிஆர்எம் உத்தரவாதத்தின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

முன்னதாக, ரோஸ்மா மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சட்டத் துறை தலைவரின் அனுமதி பெறப்பட்டதாக எஸ்பிஆர்எம் தெரிவித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.