NATIONAL

பிஎஸ்எச்: 3.2 மில்லியன் விண்ணப்பங்கள் பதிவு!

28 மார்ச் 2019, 6:42 AM
பிஎஸ்எச்: 3.2 மில்லியன் விண்ணப்பங்கள் பதிவு!

கோலாலம்பூர், மார்ச் 28-

பந்துவான் சாரா ஹீடுப் (பிஎஸ்எச்) என்ற வாழ்க்கைச் செலவின உதவித் தொகைக்கு இதுவரை 3.2 மில்லியனுக்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

இதில் 530,000 புதிய விண்ணப்பங்கள் எனவும் இதர 2.67மில்லியன் விண்ணப்பங்கள் தகவல்கள் புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் என்றும் அவர் சொன்னார்.

உள்நாட்டு வருமான வரி வாரியம் தொடர்ந்து பலரின் தகவல்களை தரவுகளைப் பதிவேற்றம் செய்து வருவதால், இந்த எண்ணிக்கை விரைவில் 4 மில்லியனைத் தொடும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

பிஎஸ்எச் உதவிக்கு விண்ணப்பித்தோரின் பதிவு குறித்து ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் தொடுத்த வினாவிற்கு நிதியமைச்சர் குவான் எங் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.