NATIONAL

போலி அறிக்கை : குவாங் எங்கின் செயலாளர் போலீசில் புகார்

9 மார்ச் 2019, 6:13 AM
போலி அறிக்கை : குவாங் எங்கின் செயலாளர் போலீசில் புகார்

கோலாலம்பூர், மார்ச் 9-

நிதியமைச்சர் லிம் குவாங்கை தொடர்புப்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான தகவல் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

புலனம் போன்ற சமூக ஊடகங்களில் வழியாக பரப்பப்படும் அந்த அறிக்கையை நிதியமைச்சர் ஒரு போதும் வெளியிடவில்லை என்றும் இது அவருடைய நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள பொய்யான அறிக்கை என்று லிம்மின் பத்திரிகை செயலாளர் லுஃப்தி ஹாக்கிம் கூறினார்.

உள்ளூர் நாளிதழ் ஒன்றில் வெளிவந்தது போல் வடிவமைக்கப்பட்ட அந்த அறிக்கை பொறுப்பற்ற தரப்பினரால் உருவாக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

நிதியமைச்சர் மீது வெறுப்புணர்வை துண்டும் நோக்கத்தில் இனங்களுக்கு இடையில் சினத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த அறிக்கை தீய நோக்கம் கொண்ட சிலரால் வெளியிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.